Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

தாம்பரம்-செங்கோட்டை சிறப்பு ரயில், நவம்பர் 9-ம் தேதி இரவு 11.55 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 12.15 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.

பகிரவும் WhatsApp Facebook

தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் கூடுதல் நெரிசலைக் குறைக்கும் வகையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 6 ஜோடி சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

1. ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06104/06103), நவம்பர் 5-ம் தேதி இரவு 8.15 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயில், மறுநாள் காலை 11 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். மறுமார்க்கத்தில் நவம்பர் 7-ம் தேதி அதிகாலை 12.30 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, அதே நாள் பிற்பகல் 3.50 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.

2. ராமேஸ்வரம்-தாம்பரம் ஒருவழிச் சிறப்பு ரயில் (06108), நவம்பர் 9-ம் தேதி மாலை 4.55 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

3. திருவனந்தபுரம் வடக்கு-தாம்பரம் சிறப்பு ரயில் (06164/06163), நவம்பர் 10-ம் தேதி இரவு 8 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறுமார்க்கத்தில் நவம்பர் 11-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை 5 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு சென்றடையும்.

4. சென்னை எழும்பூர்-ராமேஸ்வரம் சிறப்பு ரயில் (06037/06038), நவம்பர் 10-ம் தேதி அதிகாலை 12.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, மாலை 5.30 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். மறுமார்க்கத்தில் அதே நாள் இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

5. தாம்பரம்-செங்கோட்டை சிறப்பு ரயில் (06089/06090), நவம்பர் 9-ம் தேதி இரவு 11.55 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 12.15 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கத்தில் நவம்பர் 10-ம் தேதி மாலை 3 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

6. திருவனந்தபுரம் வடக்கு-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06158/06157) நவம்பர் 10-ம் தேதி இரவு 7.40 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கில் இருந்து புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 1 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். மறுமார்க்கத்தில் நவம்பர் 11-ம் தேதி பிற்பகல் 3.15 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.15 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு சென்றடையும்.

இந்த ரயில்கள் முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ராமேஸ்வரம்-சென்னை சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நவம்பர் 3-ம் தேதி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கும். மற்ற சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
Ambuja Cements plans ₹14,500 cr expansion
அடுத்த செய்தி
தீபாவளி ஆஃபர்: தமிழகம் வழியாக இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு

தொடர்புடைய செய்திகள்